பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2013

ஓட்டுப்பதிவை அதிகரிக்க பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரரை களமிறக்கும் தேர்தல் ஆணையம் 
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 


இதற்காக பாலிவுட் நடிகை சோகா அலி கான், கிரிக்கெட் வீரர் விராத் கொஹ்லி ஆகியோரை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளது.
ஊடகங்களின் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை அறிவித்த தேர்தல் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர தூதர்கள் பிரிண்டிங் மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனக்கு இத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை சோகா அலி கான் தெரிவித்துள்ளார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நகர்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நகரத்தை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்தும் செயல் எனவும் சோகா தெரிவித்துள்ளார். 
விராத் கொஹ்லி கூறுகையில், மைதானத்தில் எனது பேட் பேசும் அதே போல் தேர்தல் தினத்தன்று மக்களின் ஓட்டு பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.