பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2013


சென்னையில் திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்க வேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற் காமல்  தவிர்க்க வேண்டும்.   சிங்கள அரசுக்கு இந்தியா போர்க்கப்பல்களை வழங்கக்கூடாது.  இந்தியாவிலி ருந்து கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக்கூடாது. 


  இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை  வலியுறுத்தி  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கட்ந்த 1ம் தேதி முதல் கோர்ட் அனுமதியுடன் வள்ளுவர் கோட்டம் அருகில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினார்.   அவருடன் 100 பேர் உண்ணா விரதம் இருந்தனர்.  மாலை 5 மணிக்கு உண்ணாவிரத்தை முடித்த திருமாவளவன்,  ‘’தியாகுவின் போராட் டத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களூம் அரசியல் கட்சிகளூம், மாணவர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.