பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2013

லாலுவுக்கு சிறை எதிரொலி: ம.பி. மாநில ராஷ்டிரீய ஜனதாதள கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்தது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில ராஷ்டிரீய ஜனதாதள கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்துள்ளது. அதன்படி மாநில ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் சஞ்சய் பாபுலால் சிலாவத் மற்றும் தலைவர்கள், மத்திய பிரதேச பா.ஜனதா தலைவர் நரேந்திர சிங் டோமரை சந்தித்து தங்களை பா.ஜனதாவில் இணைத்துக்கொண்டனர்.
பா.ஜனதாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்ததாக, சஞ்சய் பாபுலால் சிலாவத் பின்னர் கூறினார்.