பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2013


இளைஞனின் சடலம் புதருக்குள்ளிருந்து மீட்பு : நொச்சிக்குளத்தில் சம்பவம்
நொச்சிக்குளம் மேற்கு கரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.


நொச்சிக்குளம் பெரியவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சோமநாதன் சத்தியசீலன் (வயது 17) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.