பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2013

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷாவின் தந்தை மோசடியில் ஈடுபட்டு கைது!
பிரபல சிங்கள நடிகையும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலியின் தந்தை நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏழு லட்ச ரூபாவிற்கு மேல் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென்னக்கோன் முதியன்சேலாகே ஜயதிஸ்ஸ தென்னக்கோன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி ஜீவரட்னம் என்பவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, தென்னக்கோன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தலா ஐந்து லட்ச ரூபா சரீரப் பிணைகள் இரண்டின் அடிப்படையில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாத்த்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையிலும் கொழும்பு மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவில் ஆஜராகி கையொப்பிமிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.