பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி சேலத்தில் தீப்பந்தத் தாக்குதல்.B B C 
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி இன்று புதன் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.
ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அலுவலகக் கதவின் மீது பொருத்தப்பட்டிருந்த விளக்குகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
பிரதமரோ வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்தோ காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது எனக் கோரும் சில துண்டுப் பிரசுரங்களும் அலுவலகத்திற்குள் வீசப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சிலர் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்,
நேற்றுதான் சென்னையில் இரு தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அதே கட்சியினைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாகவே காமன்வெல்த் மாநாடு தொடர்பில் பல்வேறு அமைப்புக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்ற