பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

 கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது; சுரேஷ் பிரேமச்சந்திரன் 
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு என பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் அத்துடன் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும்.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.