பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2013

ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
த தீர்ப்பை கூறியுள்ளது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.  போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி முருகன் அனைவரையும் விடுதலை செய்தார்.

சங்கரராமன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை கேட்டு, மகன் ஆனந்த்சர்மா அதிர்ச்சி  அடைந்துள்ளார்.
தீர்ப்பை கேட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த்,   ‘’தீர்ப்பு அதிர்ச்சியாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது. எனது தந்தையை கொன்றவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


என் தந்தை ஒன்றும் தானே வெட்டிக்கொண்டு இறக்கவில்லை.   தீர்ப்பை ஆய்வு செய்து மேல்முறையீடு குறித்து முடிவு செய்யப்படும்.  நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் மட்டுமாவது தண்டிக்கப் பட்டிருக்கலாம்’’என்று தெரிவித்தார்.