பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 



21.11.2013 வியாழக்கிழமை புதிதாக பொறுப்பேற்று கொண்ட நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹா வழக்கை விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை. வக்கீல்கள் மட்டுமே ஆஜராகினர்.

இது வரையிலான வழக்கு விவர நிலைகளை நீதிபதி கேட்டறிந்தார். தொடர்ந்து வரும் 27ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.