பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2013

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.

பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013