பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2013

மதுரை ஆதீனம் மீது 750 கோடி மோசடி புகார்
பல ரூபாய் மோசடி செய்ததாக மதுரை ஆதீனத்தின் மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.   இன்று காலை 11 மணி அளவில் மதுரை போலீஸ் கமிசனர் சஞ்சய் மாத்தூரை
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைகண்ணன் சந்தித்து புகார் மனு அளித்தார்.


அந்த மனுவில்,  மதுரை ஆதீன மடம் 1500 ஆண்டுகள் பழமையானது.  கடந்த 1.3.1980ம் ஆண்டு முதல் ஆதீன மாக அருணகிரிநாக்தர் என்ற மதுரை ஆதீனம் இன்று வரை 33 ஆண்டுகள் இம்மடத்திற்கு வரவேண்டிய வருமானத்தை சுமார் 750 கோடி வரை அபகரித்துள்ளார்.


மடத்தில் தற்போது ஆதீனத்திற்கு உதவியாளராக இருக்கும் வைஷ்ணவியும் இதற்கு உடந்தையாக உள்ளார்.  மதுரை ஆதீன மடத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  அந்த கடைகளின் மூலம் மாதம் 10 லட்சம் வரைகிடைக்கிறது.


இதுவரை 33 ஆண்டுகளில் 750 கோடி வரை வருமானத்தை பெற்றுள்ளார்  ஆதீனம்.  அவருடைய உதவி யாளர் வைஷ்ணவி,  வைஷ்ணவி தாயார் கமலம், சகோதரி கஸ்தூரி, கணவர் வேதமூர்த்தி அனைவரும் சேர்ந்துகொண்டு ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரித்துவருகின்றனர்.
மடத்தின் வருமானத்தில் இருந்து 25 லட்சம் வரை வைஷ்ணவி திருமணத்திற்கு ஆதீனம் செலவு செய்துள்ளார்.  ஆதீனம் மடம் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ கூடாது என்ற நிலையில் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதையும் மீறி 55 லட்சம் ரூபாய்க்கு மதுரை அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.  ஏற்கனவே அருணகிரிநாதரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கக்கோரி தமிழக அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன்.  அந்த மனு விசாரணை நடைபெறும் நிலையில்,  அவருடைய பதவியை நீக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.