பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

30 கிலோ ஹெரோயினுடன் லைபீரிய நாட்டுப் பிரஜை கைது

30 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட லைபீரிய நாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த 55 வயதுடைய லைபீரிய பிரஜை இலங்கையில் இருந்து டுபாய் ஊடாக உகண்டாவிற்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டுள்ளார்.
 
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 19 கோடியே 50 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.