பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

ஜெயேந்திரர், விஜயேந்திரர் புதுவை கோர்ட்டில் ஆஜர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் வக்கீல் வாதங்கள் முடிந்து தீர்ப்பு கூறும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.



சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். அதில் கதிரவன் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந் திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 15 பேர் ஆஜரானார்கள். 8 பேர் ஆஜராகவில்லை.
சங்கரராமன் மகன் ஆனந்த்சர்மா, வழக்கு விசாரணை தொடர்பான வீடியோ, ஆடியோ மற்றும் ஆவணங் களை தனக்கு தரும்படி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கு எதிராக கதிரவன் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில் இருந்த நிலையில் கதிரவன் கொலை செய்யப்பட்டார். இதனால் அவர் தாக்கல் செய்த மனு தானாக ரத்தாகிவிட்டது.
இந்த மனுவின் விசாரணை ஏற்கனவே கோர்ட்டில் நடந்து வந்ததால் சங்கராமன் கொலை வழக்கில் தீர்ப்பு கூறுவது தாமதமாகி வந்தது.
இன்று புதுவை கோர்ட்டில் விசாரணை நடந்தபோது நீதிபதி முருகன், ஆனந்த் சர்மாவிடம் நீங்கள் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கேட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் இந்த வழக்கு தள்ளிக்கொண்டே போகிறது. எனவே ஆடியோ, வீடியோ வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நீங்கள் வாபஸ் பெறுகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு ஆனந்த் சர்மா இந்த கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே தீர்ப்பு கூற ஆட்சேபணை ஏதும் இல்லை என்று கூறினார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வீடியோ, ஆடியோ வேண்டும் என்று ஆனந்த்சர்மா தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்று வக்கீல்கள் கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதி இது சம்பந்தமாக இருதரப்பினரும் கலந்து பேசி முடிவை சொல்லுங்கள். அதுவரை கோர்ட்டை ஒத்தி வைக்கிறேன் என கூறி சில மணி நேரங்களுக்கு கோர்ட்டை ஒத்திவைத்தார்.   அதைத் தொடர்ந்து இருதரப்பு வக்கீலும் கலந்து பேசினார்கள். அவர்கள் முடிவு சொன்னதற்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.