பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்கப் பட்டது. ஒரு கும்பல் சாக்குப் பைகளை தீயிட்டு கொளுத்தி வீசியதில் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள விளக்குகள்
சேதம் அடைந்தன. அப்போது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வீசிவிட்டுச் சென்றனர்.


இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையாளர் மாகாளி உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.