பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2013

கார் - லாரி நேருக்கு நேர்: 4 பேர் பலி
    தருமபுரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் கார்
மீது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 4 பேரும், திருவண்ணாமலை தீபத்துக்கு சென்றுவிட்டு தருமபுரிக்கு திரும்பிச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.