பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2013

நம்பியார் வன்னி சென்றிருந்ததால் பிரபாகரன் தப்பியிருப்பார்: கோத்தபாய
ஐக்கிய நாடுகளின் அதிகாரி விஜய் நம்பியாரை முல்லைத்தீவுக்கு அனுமதித்திருந்தால் பிரபாகரன் தப்பியிருப்பார் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இலங்கையின் ஆங்கில செய்திதாளுக்கு கருத்துரைத்த அவர்,
பிரபாகரன்,போர் நிறுத்தம் ஒன்றுக்கு தயாரானபோதும் ஆயுதங்களை கீழே வைக்க உடன்படவில்ல. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி விஜய் நம்பியார் போர் நிறுத்தம் ஒன்றின் நிமித்தம் இலங்கைக்கு வந்தார்.
எனினும் பிரபாகரனுக்கு போர் நிறுத்த வாய்ப்பை கொடுத்தால் அவர் மீண்டும் போருக்கு தயாராவார் என்ற அடிப்படையில் அதற்கு இடம்தரப்படவில்லை.
எனவே விஜய் நம்பியார் முல்லைத்தீவுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.