பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2013

இசைப்பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அடைக்கலம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அலைவரிசையின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 
இசைப்பிரியாவின் அத்தை ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது,
இசைப்பிரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரிகளுக்கு ஏற்கனவே பிரிட்டனில் புகலிடம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் இசைப்பிரியாவின் பாட்டி மற்றும் சகோதரி ஒருவருக்கு கனடா அரசியல் புகலிடம் வழங்கியிருந்தது.