பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2013

இராணுவத்தை அகற்றுவதில் மாற்றமில்லை! மாவீரர் நாளில் எமது செயற்பாட்டை யாரும் தடுக்க முடியாது: அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சூளுரை
இராணுவம் எமது நிலங்களில் இருந்து விலக முடியாது என்றாலும் நாம் வெளியேற்றுவதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது. எமது விடுதலை வீரர்களாம் மாவீரர்களின் நாளில் எமது வடமாகண தேசிய மரநடுகையை யாரும் தடுக்க முடியாது என்கிறார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
விடுதலைப் புலிகளினால் காக்கப்பட்ட எமது நிலப்பகுதி இன்று தென்னிலங்கையால் அபகரிக்கப்படுகிறது. இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அதனை மீட்பதனை யாரும் தடுக்க முடியாது. என லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விபரிக்கிறார்.