பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013


வைகோ, சீமான் மீது கைது நடவடிக்கை இல்லை!
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பழ.நெடுமாறன்  உட்பட 83 பேர்  கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.



 பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்களை சிறையில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களை பார்க்கச்சென்ற வைகோ, சீமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை மக்கள் மன்றம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் அமரவைத்தனர்.  இவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகலாம் என்று உணர்வாளர்கள் கருதினர்.
இரவு 11.30 மணிக்கு மேல், வைகோவையும் சீமானையும் மற்றும் பலரையும் போலீசார் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்லுமாறு சொல்லிவிட்டது.  இதையடுத்து அவர்கள் மீது கைது நடவடிக்கை என்று தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகி, காவல்துறையிடம் நாளை காலை பள்ளி திறக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.