பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

பழ.நெடுமாறன் மீது வழக்கு - நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் பழ.நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்யட்டுள்ளது.


தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்று சுவர் இடித்து தள்ளப்பட்டது.



தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது செய்யப் பட்டார்.  கைது செய்யப்பட்ட அவரை மாலையில் போலீசார் விடுவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று இரவு, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பழ.நெடுமாறன் உட்பட 83 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
நெடுமாறன் உட்பட 83 பேரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது காவல் துறை.