பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2013

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அனந்தி அமெரிக்கா செல்கிறார்

வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தமது ஏற்பாட்டில் அமெரிக்கா வருகிறார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் மனித உரிமை சட்டத்தரணியான இரட்ணவேல் அவர்களும் அமெரிக்கா செல்கிறார்.
அனந்தி சசிதரன் முள்ளிவாக்கால் இறுதி யுத்தத்தின் பின்னர், இராணுவத்தால் கைதாகி காணாமல் போனவர்களுக்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுத்தும் வந்தவர், வட மாகாண சபைக்கான தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குக்கள் பெற்று வெற்றியீட்டியவர்.
அமெரிக்காவிற்கு வருகை தரும் அனந்தி அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.