பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம்: மொரீஷியஸ் பிரதமர் 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது.
இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின்
மாநாடு துவங்குகிறது. இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது, மொரீஷியஸ் நாடும் சேர்ந்துள்ளது.

இது குறித்து, மொரீஷியஸ் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம், அந்நாட்டு பார்லிமென்ட்டில் கூறியதாவது: இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. போர் முடிந்த பின்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. எல்லாவற்றையும் விட முதன்மையானது மனித உரிமைக்கு மதிப்பு கொடுப்பது தான். ஆனால், இலங்கையில் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம்.இவ்வாறு, ராம்கூலம் கூறினார்.