பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2013

லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் [ பி.பி.சி ]
லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ''மாவீரர் தின நிகழ்வுகள்'' எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ''தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்'' என்னும் அமைப்பினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
நண்பகல் அளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பிரிட்டன் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
பெரும்பாலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து உயிரிழந்த சிலரையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான கந்தையா இராஜமனோகரன் தமிழோசையிடம் கூறினார்.