பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன்
, உத்திராபதி, மாசிலாமணி, உதயகுமார், விடுதலை வேந்தன், பாஸ்கரன், பழ.ராஜேந்திரன், ராமதாஸ், குள,பால்ராஜ், அருண்.மாசிலாமணி உள்ளிட்ட  83 பேர்  கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.


 பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்களை சிறையில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

மக்கள் மன்றத்தில் இருந்து 83 பேரையும் தூய வளவனார் பள்ளிக்கு மாற்றினர்.மாஜிஸ்திரேட்டை தூயவள வனார் பள்ளிக்கு வரவழைத்து 83 பேரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.  இதையடுத்து 83 பேரையும் வரும் 27ம் தேதி வரை 14 நாள் திருச்சி சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்க வேண்டும் என தஞ்சை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின்னர் 83 பேரும் திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்ட