பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்ல பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு தடை
வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்லப் பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளினதும் நினைவு தூபிகளுடன் கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகது நினைவு தூபியும் வல்வெட்டித்துறை தீருவில் தூபியிலேயே அமைக்கப்பட்டிருந்தது.
எனினும் அண்மையில் அவை அனைத்தையும் இடித்தழித்த படைத்தரப்பு அங்கு முகாம் அமைக்கவும் முற்பட்டது.
இந்தநிலையில்,  குறித்த காணி தமக்கே சொந்தமானதென உரிமை கோரியிருந்த வல்வெட்டித்துறை நகரசபை அங்கு சிறுவர் பூங்காவொன்றினை அமைக்கவும் அறிவித்திருந்தது.
அத்துடன் பெயர்பலகை நாட்டப்பட்டு பூங்கா அமைப்பு வேலைகளும் ஆரம்பமாகியிருந்தது.
எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரி இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் வழக்கொன்றினை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
நகரசபை தலைவர் அனந்தராஜ் மற்றும் துணைத்தலைவர் சதீஸ் மற்றும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரிற்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி குறித்த பூங்கா அமைப்பு பணிகளிற்கு குந்தகம் விளைவிக்க கூடாதென பணித்ததுடன் அங்கு படை முகாமிற்கு மண் அகழ்வதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அண்மையில் பூங்காவினது காணியினுள் நடப்பட்டிருந்த பெயர் பலகைகளும் இடித்தழிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே விடுதலைப் புலிகளது பயன்பாட்டிலிருந்த காணிகள் தமக்கே உரியவை என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கருத்திற்கு எதிரான தீர்ப்பாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.