பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. வழக்கறிஞர் மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் சென்னையில், கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாநாட்டில், ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்து அவர்களுக்கு அரசியலில் சமஉரிமையையும் சுதந்திரமான வாழ்வும் அமைய தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடினார்கள்.
சிங்களவரோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்ட பின்புதான் தனி ஈழக் கோரிக்கையும், அதற்கான போராட்டமும் விடுதலைப் புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான தடை நியாயமற்றது.
எனவே, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். தினகரன் ஆகியோர் இன்று மாலை சிறப்புரை ஆற்றவுள்ளனர்.