பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

பிரிட்டிஷ் பிரதமரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச, 'அவ்வாறான விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சுதந்திரமான விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்று அமைக்கப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் டேவிட் கமரூன் காலக்கெடு விதித்துள்ளார்.
இலங்கையில் நடந்துவரும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டின் போது, வடக்கே யாழ்ப்பாணம் சென்று தமிழ்த் தலைவர்களை சந்தித்து திரும்பிய பிரிட்டிஷ் பிரதமர் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது