மட்டுநகரில் முஸ்லீம் நபரின் உணவு விடுதியில் விபச்சாரத் தொழில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்புறமாகவுள்ள காத்தான்குடியை சேர்ந்த முஸ்லீம் நபரால் நடாத்தப்படும் ஹொட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு யுவதிகளை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
இந்த ஹொட்டலில் பணியாற்றும் இந்த பெண்கள் இரவில் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் இப்பெண்களை கைது செய்துள்ளனர். இந்த ஹொட்டலிலேயே தங்கும் இப்பெண்களுக்கு அங்கேயே தங்குமிட வசதிகளை வழங்கிய ஹொட்டல் உரிமையாளர் இவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.thinakathir