பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

டேவிட் கமரூன் - முத்தையா முரளிதரனை சந்தித்தார்! கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டார்
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூன் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லிணக்கத்துக்கான முரளி வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முத்தையா முரளிதரன் கொழும்பிலுள்ள சீ.சீ.சீ மைதானத்தில் பயிற்சியளித்து வருகின்றார்.
மைதானத்திற்கு இன்று சனிக்கிழமை சென்றே கெமரூன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் நல்லிணக்கத்துக்கான முரளி வெற்றிக்கிண்ண அமைப்பில் அங்கம் வகிக்கின்ற யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் எட்வேர்ட் எடின் மற்றும் யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் றிசாந்த் ரியூடர் ஆகியோரை கெமரூன் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிரிக்கெட் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்தாகும்.