பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2013

வட மாகாணசபையின் மூன்றாவது அமர்வில் கவனவீர்ப்பு போராட்டம்
வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பமாகியது.


வலி. வடக்கில் நடைபெறுகின்ற வீடழிப்புக்களை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுலோக அட்டைகள் வழங்கப்பட்டது அதன்பின் கூட்டமைப்பின் சக உறுப்பினர்களும் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.

இதேவேளை முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு இன்றைய அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.