பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2013

ரொறொன்ரோ- கனடா. ரோறொன்ரோ நகரம் மிக உச்ச கட்ட குளிர் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள் கிழமை வெப்பநிலை உறைதல் நிலைக்கு மிகவும் கீழே சென்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்
பட்டுள்ளது.
வெளியில் அதிக நேரம் நிற்பது ஆபத்தானதென்றும், முக்கியமாக தங்குமிடவசதியற்றவர்கள் இந்த அதி குளிர் காலநிலையால் தாக்கப்படலாமாகையால் பாதுகாப்பான சூடான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை அதிஉயர் வெப்பநிலை -8C ஆக எதிர்பார்க்கப்பட்ட போதும் இரவு முழுவதும் -17 C ஆக காணப்பட்டுள்ளது. வெப்பநிலை வியாழக்கிழமை வரை பூச்சியத்திற்கு மேல் செல்லும் என எதிர்பார்க்க முடியாதெனவும் கூறப்படுகின்றது.
மறு அறிவித்தல் வரை இந்த எச்சரிக்கை செயல்பாட்டில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் ஆண் பெண் இருபாலார்களுக்கும் மேலதிக புகலிட வசதிகள் உருவாக்கப் படும் எனவும், வெளிக்களப் பணியாளர் சேவைகள் அதிகரிக்கப்படுவதோடு வீடற்றோர் சேவைகளுக்காக மேலதிக சமூக சேவையாளர்கள் அமர்த்தப் படுவார்களெனவும் அறியப்படுகின்றது.