பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கான மூலோபாயங்கள், இரணைமடு குடிநீர்த்திட்டம், பேச்சுக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு, வடக்கு மாகாண ஆளுனர் விவகாரம், உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. 

இன்றைய கூட்டத்தின் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.