பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2013

சிறீதரன் எம்.பிக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அண்மையில் மாவீரர் தினம் தொடர்பிலும் பிரபாகரன் தொடர்பிலும் சிறீதரன் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இந்த நடவடிக்கைக்காக சிறீதரனுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அம்பாறை நகரசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகரசபையின் தலைவர் நலின் ஜயவிக்ரமவினால் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.