பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2013

காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர். மக்கள் ஆதரவு இல்லாமல் மதவாத சக்திகளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையேதான போட்டி ஏற்படும். தேசிய அளவிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் மேலிட உத்தரவுகளை மாநில நிர்வாகிகள் கடைபிடிக்கவேண்டும் என்றார்.