பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2013

நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
பெற வேண்டும் என்று அவர் மீது இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் மோகன்பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தது.