பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2013


நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது: பிரணாப் முகர்ஜி

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று
வருகிறது. அங்கு லட்சக்கணக்காண மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்,
பிரணாப் முகர்ஜி பேசுகையில், 
மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய மக்கள் சார்பாக அஞ்சலி செலுத்துகிறேன். உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தவர் மண்டேலா. மிகச் சிறந்த தலைவர். மண்டேலாவின் வாழ்க்கை மகாத்மா காந்தியை நினைவுபடுத்துகிறது. மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது என்றார்.