பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2013

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன.



70 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான் அதிகமான பேர் கிரிமினல் வழக்கில் உள்ளனர். 17 பேர் மீது கிரிமினல் வழக்கு இருக்கிறது. பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 50 சதவீத எம்.எல்.ஏ. கிரிமினல் குற்றச்சாட்டை எதிர் நோக்கி உள்ளனர்.
17 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் மீது கொலை குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளன.
புதிதாக அரசியலுக்கு நுழைந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும், காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சிரோன் மணி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சுயேட்சை சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.
22 எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்வாகி உள்ளனர். அதில் 15 பேரது பெயர் கிரிமினல் வழக்கில் உள்ளது. கிரிமினல் வழக்கில் சிக்கிய 10 பேர் புதிததாக எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். 2008–ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 29 எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்கு இருந்தது. தற்போது அது 25 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.