சுவிட்சர்லாந்தில் கடுமையாகும் புகலிடச் சட்டங்கள் |
சுவிட்சர்லாந்துக்குள் புகலிடம் தேடி வருவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் 57 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
1 ஜூன், 2013
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவன் படுகொலை: மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோயில் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி சசிகலா. தெய்வசிகாமணி ரியல் எஸ்டேட் உட்பட சில தொழில்களை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
கடந்த 30ஆம் தேதி இரவு கணவன் மனைவியும் வீட்டில் குழந்தையோடு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், தெய்வ சிகாமணியை அரிவாளால் வெட்டி வெளியே இழுத்துச்சென்று ஈரோடு பவானி சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
யாரோ சிலர் வந்து தனது கணவரை கொலை செய்துவிட்டதாக, சசிகலா கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் சசிகலாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சசிகலாவின் கணவர் தெய்வசிகாமணி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்து, மனைவி சசிகலாவே கள்ளக்காதலன் சசிகுமாரை ஏவிவிட்டு கூலிபடை அமைத்து கணவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.