பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

பேஸ்புக்கில் வந்த ஆபாச செய்தியால் கேரள பெண் தற்கொலை
கேரளாவின் கொச்சியை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் தன்னை பற்றி பக்கத்து வீட்டுக்காரர் பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை
செய்துகொண்டார்.

பேஸ்புக்கில் தன்னைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரர் ஆபாசமாகவும் அவதூறாகவும் தகவல்களை போஸ்ட் செய்திருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் 23-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அந்தப் பெண் முறையிட்டார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முறையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.