பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

நியூசிலாந்து -இந்திய அணிக்களுக்கிடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
ஆக்லாந்தில் இன்று  நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 314 ரன்கள்
எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக குப்தில் 111 ரன்கள் (129 பந்துகளில்) எடுத்தார்.
இந்திய சார்பில், ஷமியும், ஜடேஜாவும் தலா 2 விக்கெட்களையும், குமார், அரோன், அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்திய அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ரவிந்திர ஜடேஜா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.இதனால் ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.
இந்திய அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா 66 ரன்களும்,அஸ்வின் 65 ரன்களும்,தோனி 50 ரன்களும் எடுத்தனர்.