பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது,மு.க. அழகிரி

திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது என  திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமாக இருந்தவருமான மு.க. அழகிரி சென்னையில்
செய்தியாளர்களிடம் கூறினார்.
குழப்பம் ஏற்படுத்தி, கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்க முயன்றதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க. அழகிரி நேற்று நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது. தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் தேவையில்லை, திமுக தானாகவே தோற்றுவிடும். நியாயத்திற்காக போராடியதற்காக கிடைத்த பரிசே நீக்கம் என்று கூறினார்.
வருங்காலமே என சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.