பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014

காங்கிரசுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டி : மாயாவதி


பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான முன்னாள் முதல் மந்திரி மாயாவதி இன்று 58-வது பிறந்தநாள் விழா கூட்டம் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பூங்காவில் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பாராளுமன்ற தேர்தல் குறித்து கூறியதாவது: 

நாடு முழுவதும் உள்ள தலித்துகளை நாம் ஒன்றிணைக்கவேண்டும். முஸ்லிம்கள் மற்றும் மேல்சாதி மக்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்கவேண்டும். 

முசாபர்நகர் கலவரத்திலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தலித்துகள் நின்று உள்ளனர். கடந்த 9 வருடங்களாக அரசியல் கட்சியின் பகடைக்காயாக செயல்படும் சி.பி.ஐ., என்னை விசாரணை என்ற பெயரில் சிக்கவைத்துள்ளது. வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. தனித்தே போட்டியிடுவோம் என அவர் கூறினார்.