பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

பாப்பரசர் பறக்கவிட்ட புறாக்கள் மீது ஏனைய பறவைகள் தாக்குதல்

உலக அமைதியை வேண்டி பாப்பரசர் பிரான்சிஸ் வத்திக்கான் நகரில் சிறுவர்களுடன் சேர்ந்து பறக்கவிட்ட இரு வெள்ளை புறாக்களை ஏனைய பறவைகள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப்பரசரின் வாராந்த பிரார்த்தனையின் போதே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த புறாக்கள்
பறக்கவிடப்பட்டன. எனினும் இந்த புறாக்கள் விடுவிக்கப்பட்ட உடனேயே அங்கு காத்திருந்த காகம் மற்றும் கடற்பறவைகள் அவைகளை துரத்தி தாக்க ஆரம்பித்தன. இதனை அங்கு குழுமியிருந்த 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் கண்டனர்.
இதில் கடற்பறவையிடம் சிக்கிக்கொண்ட புறா தன்னை விடுவிக்க போராடியது. மற்றைய புறாவை காகம் ஒன்று துரத்தியது. பின்னர் இந்த புறாக்களுக்கு என்னவானது என்று தெரியாது என்று குறிப்பிடப்பட் டுள்ளது.