பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூபி தீவு

பசிபிக் கடலில் புதிதாக உருவான தீவு ஒன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டோக்கியோ பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சக்தி மிகுந்த கடற்கீழ் அரிப்பு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. அப்போது உருவான புதிய தீவுவொன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உருவானபோது இருந்ததைவிட, தற்போது 30 மடங்கு பெரிதாக உள்ளது என்றும் ஒரு கோணத்தில் பார்த்தால் ஸ்கூப்பி கார்டூன் சித்திர கதாபாத்திரம் போன்று தென்படுவதால் இந்த பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஜப்பானின் கடற்பிராந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்தின் அளவு விரிவடையும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.