பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2014

அண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்: நடிகர் நெப்போலியன்முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றார்.   அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று,  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’நான் அமெரிக்கா சென்று நேற்று இரவுதான் சென்னை திரும்பினேன்.  இதற்கிடையே கட்சிக்குள் நிறைய குளறுபடிகள் நடந்துவிட்டன.  அண்ணனின்( அழகிரி) பின்னால் துணை நிற்பேன்.  ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்.  நாளை அவரது பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்றுவிட்ட பின்னர்தான் சென்னை திரும்புகிறேன்’’ என்றார்.