பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

கரு ஜயசூரியவிற்கு மதம் பிடித்து இரவில் பெண்களின் வீடுகளுக்குள் நுழைகின்றார்!- ரோஹித்த அபேகுணவர்தன
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தேடிப்பிடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய இரவு நேரங்களில் பெண்களின் வீடுகளுக்கு ஓடித் திரிவதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது வேட்பாளரை தேடுவதில் கரு ஜயசூரியவுக்கு யானைக்கு பிடிக்கும் மதம் பிடித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தில் உள்ள சகல யானைகளுக்கு பிடித்துள்ள மதம் காரணமாக இரவு நேரங்களில் ஒவ்வொரு பெண்களின் வீடுகளுக்கு நுழைக்கின்றனர்.
பழைய சீமாட்டியின் பின்னால் அனைவரும் ஓடுகின்றனர். இவ்வாறு பெண்கள் பின்னால் ஓடி திரிந்து பொதுவேட்பாளரை தேடுகின்றனர்.
ஆனால் முழு நாடும் ஏற்றுக்கொண்ட பொதுவேட்பாளர் ஒருவர் இருக்கின்றார். அவர்தான் மகிந்த ராஜபக்ச, ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட பல பெண்கள் வந்தாலும் ஜனாதிபதி மகிந்தவை யாரும் தோற்கடித்துவிட முடியாது என்றார்.