பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது!- கீதா குமாரசிங்க
ஏதேனும் ஒரு காரியத்தை செய்து கொள்வதற்காக பெண்கள் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தர - எல்பிட்டிய அமைப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்கள் தமக்கு தேவையான ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொள்ள பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் பெண்கள் செய்வதறியாதவர்களாக மாறியுள்ளனர்.
பெண்கள் சித்திவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பிரதேச சபை அரசியல்வாதிகளின் சித்திரவதைகளுக்கு ஆளான எத்தனை பெண்கள் இன்றுள்ளனர்?.
பிரதேச அரசியவாதிகளால் பெண்களுக்கு பல கொடுமைகள் நேர்கின்றன. வன்முறையாளர்களான பிரதேச அரசியவாதிகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்.
பிரச்சினைகள் இருந்தால் பெண்கள் அமைதியாக இருந்து விடக் கூடாது என்றார்.