பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

தேவயானியின் தந்தை மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம் நடந்தது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி
பணிப்பெண் சங்கீதாவின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித் ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங் கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக இந்தியா–அமெரிக்கா இடையே தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவயானியின் தந்தை தலை மையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது.