பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன்
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுத்தனர். அப்போது வயிற்றில் குடல்வால் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். இது பற்றி ஸ்ருதி தரப்பில், கமலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஐதராபாத் மருத்துவமனையிலேயே ஸ்ருதிக்கு ஆபரேஷன் செய்யும்படி கூறினார். இதையடுத்து ஸ்ருதி ஹாசனுக்கு ஆபரேஷன் மூலம் குடல்வால் அகற்றப்பட்டது.
இது குறித்து ஸ்ருதி மேனேஜரிடம் கேட்டபோது, ஸ்ருதி தைரியமானவர். அவரை 10 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை செல்போனில் தொடர்பு கொண்டு ஸ்ருதியின் நலன் குறித்து விசாரித்து வருகிறார் கமல்.