பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014

ராதிகாவின் குற்றச்சாட்டை கனேடிய உயர்ஸ்தானிகர் நிராகரிப்பு
இலங்கைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சென்றிருந்த போது அவரை மோட்டார் சைக்கிளில் சிலர் பின்தொடர்ந்ததாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.ராதிகா சிற்சபேசன், கனேடிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனை இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா நிராகரித்துள்ளார்.
எதனை வைத்துக்கொண்டு ராதிகா இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்தினர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கு செல்வது குறித்து இலங்கை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஏனெனில் ஒரு இராஜதந்திரி மற்றொரு நாட்டுக்கு செல்லும்போது பின்பற்ற வேண்டிய தகவல் பரிமாற்றங்கள் ராதிகாவின் விஜயத்தின் போது பின்பற்றப்படவில்லை.
இந்தநிலையில் அவரை மோட்டார் சைக்கிளில் சென்ற இலங்கையின் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்தனர் என்று சிற்சபேசன் கூறியிருப்பதை ஏற்றுக்கொளள முடியாது என்றும் வாகீஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.